×

الأعراف

வசனம் 63

அல்-முக்தஸர்

أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا۟ وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ ﴿٦٣﴾

உங்களுக்கு அறிமுகமான உங்களிலுள்ள ஒரு மனிதர் வாயிலாக உங்கள் இறைவனிடமிருந்து வஹியும் அறிவுரையும் வந்துள்ளன என்பதற்காகவா ஆச்சரியப்படுகிறீர்கள்? அவர் உங்களிடையே வளர்ந்தவர்தாம். பொய்யரோ வழிகெட்டவரோ வேறொரு இனத்தைச் சேர்ந்தவரோ அல்ல. நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையைக் கொண்டு உங்களை அச்சமூட்டவும் நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டால் உங்கள் மீது கருணை காட்டப்படலாம் என்பதற்காகவும் அவர் உங்களிடம் வந்துள்ளார்.