×

الأعراف

வசனம் 44

அல்-முக்தஸர்

وَنَادَىٰٓ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ أَصْحَـٰبَ ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۖ قَالُوا۟ نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِينَ ﴿٤٤﴾

சுவனவாசிகள், நரகவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் நுழைந்த பிறகு சுவனவாசிகள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த சுவனத்தை நாங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டோம். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நிராகரிப்பாளர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த நரகத்தை நீங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டீர்களா?” அதற்கு நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நரகத்தை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம்.” அப்பொழுது ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்: “அல்லாஹ் அநியாயக்காரர்களை தன் அருளை விட்டும் தூரமாக்குவானாக. உலக வாழ்வில் அல்லாஹ் தன் அருள் வாயில்களை அவர்களுக்காகத் திறந்து வைத்திருந்தான். ஆயினும் அவர்களை அவற்றை விட்டும் முகந்திருப்பிக் கொண்டார்கள்.