×

الأعراف

வசனம் 43

அல்-முக்தஸர்

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَـٰرُ ۖ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَـٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ ۖ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ ۖ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾

சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பரிபூரணமான அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருக்கும் பகைமையையும் குரோதத்தையும் நீக்கிவிடுவதும், அவர்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்வதுமாகும். அல்லாஹ் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை ஒத்துக் கொண்டவர்களாக அவர்கள் கூறுவார்கள்: “இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்த நற்செயலைப் புரிவதற்கு பாக்கியம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களுக்குப் பாக்கியம் அளிக்கவில்லையென்றால் நாங்களாகவே இதனைப் பெற்றிருக்க முடியாது. எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தையும் வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் உண்மையையே எங்களிடம் கொண்டு வந்தார்கள்.” அப்பொழுது ஒரு அழைப்பாளர் அவர்களை நோக்கி கூறுவார்: “இதுதான் உலகில் எனது தூதர்கள் உங்களுக்குக் கூறிய சுவர்க்கமாகும். தனது திருப்பொருத்தத்தை நாடி நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக உங்களுக்கு அவன் அதனை வழங்கியுள்ளான்”.