அல்-முக்தஸர்
يَـٰبَنِىٓ ءَادَمَ لَا يَفْتِنَنَّكُمُ ٱلشَّيْطَـٰنُ كَمَآ أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ ٱلْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءَٰتِهِمَآ ۗ إِنَّهُۥ يَرَىٰكُمْ هُوَ وَقَبِيلُهُۥ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا ٱلشَّيَـٰطِينَ أَوْلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ ﴿٢٧﴾
ஆதமுடைய மக்களே! பாவங்களை அலங்கரித்துக் காட்டி வெட்கத்தலங்களை மறைக்கும் வெளிரங்கமான ஆடையையோ தக்வா எனும் ஆடையையோ விட்டுவிடுமாறு ஷைத்தான் பாவத்தை உங்களுக்கு அலங்கரித்து ஏமாற்றிவிட வேண்டாம். தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்பதை அலங்கரித்துக் காட்டி உங்களின் தந்தையையும் தாயையும் அவன் ஏமாற்றி அதன் விளைவாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. ஷைத்தானும் அவனுடைய சந்ததிகளும் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களால் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவனிடமிருந்தும் அவனுடைய சந்ததிகளிடமிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தானை நேசர்களாக ஆக்கியுள்ளோம். நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்த முடியாது.