×

الأعراف

வசனம் 26

அல்-முக்தஸர்

يَـٰبَنِىٓ ءَادَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَٰرِى سَوْءَٰتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ ٱلتَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَـٰتِ ٱللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ ﴿٢٦﴾

ஆதமுடைய மக்களே! உங்களின் வெட்கத்தலங்களை மறைப்பதற்கு அத்தியவசியமான ஆடைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களிடத்தில் உங்களை அழகுபடுத்தும் பரிபூரணமான ஆடைகளையும் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நீங்கள் கடைப்பிடிக்கும் தக்வா என்னும் ஆடையே வெளிரங்கமான இந்த ஆடையை விட மிகச் சிறந்ததாகும். மேற்குறிப்பிட்ட இந்த ஆடை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். இது, அவன் உங்கள் மீது புரிந்த அருட்கொடைகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.