×

الأعراف

வசனம் 195

அல்-முக்தஸர்

أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ ﴿١٩٥﴾

நீங்கள் தெய்வங்களாக ஆக்கிக் கொண்ட இந்த சிலைகளுக்கு உங்களுடைய தேவைகளுக்காக நடந்து செல்லத்தக்க கால்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களை விட்டும் தீங்கைத் வலிமையிடன் தடுக்கும் கைகள் இருக்கின்றனவா? அல்லது உங்களால் பார்க்க முடியாதவற்றைப் பார்த்து உங்களுக்கு அறிவிக்கத்தக்க கண்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களுக்கு மறைவானவற்றைக் கேட்டு அதனை உங்களுக்கு எத்திவைக்கத்தக்க காதுகள் இருக்கின்றனவா? இவற்றில் எதையும் அவை பெறவில்லையெனில், எவ்வாறு அவற்றை நன்மையளித்து தீமையை அகற்றுவதற்காக வணங்குகிறீர்கள்? தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்கியவற்றை அழையுங்கள். பின்னர் நீங்களும் அவர்களும் சேர்ந்து எனக்குக் கேடு விளைவிக்க திட்டம் தீட்டுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்.