×

الأعراف

வசனம் 194

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿١٩٤﴾

இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடியவை அல்லாஹ்வின் படைப்புகள்தாம்; அவனுக்குக் கட்டுப்பட்டவைதாம். இந்த விஷயத்தில் அவர்கள் உங்களைப் போன்றவர்கள். அவர்களை விட நீங்கள் சிறந்தவர்கள். ஏனெனில் நீங்கள் உயிருள்ளவர்கள். பேசுகிறீர்கள், நடக்கிறீர்கள், கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள். உங்களின் சிலைகளோ இவ்வாறுகூட இல்லை. அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக நீங்கள் கூறும் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.