அல்-முக்தஸர்
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَـٰلِحًا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ ﴿١٨٩﴾
ஆண்கள் பெண்களே!- அவன்தான் உங்களை ஆதம் என்ற ஒரு உயிரிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து அவருடைய விலா எலும்பிலிருந்து அவருடைய மனைவி ஹவ்வாவை நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். கணவன் மனைவியுடன் கூடிய போது அவள் இலேசாக கர்ப்பமுற்றாள். அது ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அவளால் அதை உணர முடியவில்லை. இந்த கர்ப்பத்துடன் அவள் தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே சென்றாள். எவ்வித சுமையையும் அவள் உணரவில்லை. அவளுடைய வயிற்றில் அது பெரிதானபோது அவள் கனத்தை உணர்ந்த போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனிடம் பின்வருமாறு இறைஞ்சினார்கள்: -“எங்கள் இறைவா!- எங்களுக்கு நீ பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையை அளித்தால் நாங்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம்.”