×

الأعراف

வசனம் 188

அல்-முக்தஸர்

قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿١٨٨﴾

முஹம்மதே! நீர் கூறுவீராக: “எனக்கு நான் பலனளிக்கவோ என்னை விட்டும் தீங்கினை அகற்றவோ நான் சக்தி பெறமாட்டேன். ஆயினும் அல்லாஹ் நாடியவற்றைத் தவிர. அவனுக்கே அந்த ஆற்றல் உண்டு. அல்லாஹ் கற்றுத் தந்ததைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. நான் மறைவானவற்றை அறியமாட்டேன். அதனை நான் அறிந்திருந்தால் எனக்கு நன்மைகளைக் கொண்டு வரும், என்னை விட்டும் தீங்குகளை அகற்றும் விஷயங்களைச் செய்திருப்பேன். ஏனெனில் ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு முன்னும் அதன் முடிவு பற்றியும் நான் அறிந்ததனால் அவ்வாறு செய்திருப்பேன். நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதரே தவிர வேறில்லை. அவனுடைய வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டு நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் மக்களுக்கு சங்கையான நன்மை உண்டென நற்செய்தி கூறுகிறேன்.