அல்-முக்தஸர்
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا ۖ وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَـٰٓئِهِۦ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٨٠﴾
அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பரிபூரணத்தையும் அறிவிக்கும் அழகிய பெயர்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவற்றைக் கொண்டு நீங்கள் விரும்பும் விஷயத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள். அவற்றின் மூலம் அவனைப் புகழுங்கள். இந்தப் பெயர்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்குதல் அல்லது இவற்றை மறுத்தல் அல்லது இவற்றின் பொருளைத் திரித்தல் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை அவற்றுக்கு உவமையாக்குதல் ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை விட்டுப் நெறிபிறழ்ந்து செல்வோரை விட்டுவிடுங்கள். அவற்றைச் சத்தியத்தை விட்டும் திருப்பும் இவர்களுக்கு, அவர்கள் செய்துகொண்டிந்த செயல்களினால் வேதனைமிக்க தண்டனையை நாம் கூலியாக வழங்குவோம்.