அல்-முக்தஸர்
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ كَٱلْأَنْعَـٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْغَـٰفِلُونَ ﴿١٧٩﴾
நாம் மனிதர்களிலும் ஜின்களிலும் பெரும்பாலோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்கள் நரகவாதிகளுக்குரிய செயல்களைச் செய்வார்கள் என்பதை நாம் அறிந்திருந்ததனால்தான் அவ்வாறு செய்தோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு தங்களுக்குப் பயனளிக்கும், தீங்கிழைக்கும் விஷயங்களை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் இருக்கும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கண்டு படிப்பினை பெற மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் சான்றுகளைச் செவிமடுத்து அதிலுள்ளவற்றைச் சிந்திக்கமாட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் பகுத்தறிவின்மையில் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக கால்நடைகளை விடவும் வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.