×

الأعراف

வசனம் 176

அல்-முக்தஸர்

وَلَوْ شِئْنَا لَرَفَعْنَـٰهُ بِهَا وَلَـٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ﴿١٧٦﴾

இந்த வசனங்களின் மூலம் நாம் அவனுக்குப் பயனளிக்க நாடியிருந்தால் அவனுக்கு நற்செயல் புரியும் வாய்ப்பை வழங்கி இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய அந்தஸ்தை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் தனது மறுமையை விட இம்மைக்கு முன்னுரிமை வழங்கி தன் மனம் விரும்பும் அசத்தியத்தைப் பின்பற்றி இவ்வுலக இன்பங்களின்பால் சாய்ந்து தனது தோல்விக்கு வழிவகுப்பவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். உலக இன்பங்களின் மீது அவன் கொண்ட பேராசைக்கு உதாரணம் நாயைப் போன்றது. அது எல்லா நிலைகளிலும் மூச்சிறைத்துக் கொண்டே இருக்கும். அமர்ந்து இருந்தாலும் மூச்சிறைக்கும். விரட்டப்பட்டாலும் மூச்சிறைக்கும். மேற்கூறப்பட்ட உதாரணம் நம் சான்றுகளை நிராகரிக்கும் வழிகெட்ட மக்களுக்குரிய உதாரணமாகும் . தூதரே! அவர்கள் சிந்தித்து நிராகரிப்பிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் விலகுவதற்காக அவர்களுக்கு சம்பவங்களை எடுத்துரைப்பீராக.