×

الأعراف

வசனம் 175

அல்-முக்தஸர்

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَـٰهُ ءَايَـٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَـٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ ﴿١٧٥﴾

தூதரே! இஸ்ராயீலின் மக்களுக்கு அவர்களில் ஒரு மனிதனின் செய்தியை எடுத்துரைப்பீராக. நாம் அவனுக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். அவன் அவற்றை அறிந்து அது குறிப்பிடும் சத்தியத்தை அறிந்து கொண்டான். ஆனால் அதன்படி செயல்படாமல் அதிலிருந்து வெளியேறிவிட்டான். ஷைத்தான் அவனுடன் சேர்ந்து அவனுடைய தோழனாகிவிட்டான். நேர்வழிபெற்ற பிறகு அவன் அழியக்கூடிய வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.