×

الأعراف

வசனம் 142

அல்-முக்தஸர்

وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَـٰثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَـٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَـٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَـٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ ﴿١٤٢﴾

அல்லாஹ் தன் தூதர் மூஸாவுடன் இரகசியமாக உரையாட அவருக்கு முப்பது இரவுகளை வாக்களித்திருந்தான். பின்னர் பத்து இரவுகளை அதிகப்படுத்தி நாற்பது இரவுகளாக அதனை முழுமைப்படுத்தினான். மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற போது தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “ஹாரூனே! என் சமூகத்தில் என் பிரதிநிதியாக இருப்பீராக. அவர்களது விவகாரங்களை சிறந்த நிர்வாகம் மூலமும் மிருதுவான தன்மை மூலமும் சீர்படுத்துவீராக. பாவங்கள் புரிந்து குழப்பவாதிகளின் பாதையில் சென்றுவிடாதீர். பாவிகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்.”