×

الأعراف

வசனம் 141

அல்-முக்தஸர்

وَإِذْ أَنجَيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ ﴿١٤١﴾

இஸ்ராயீலின் மக்களே! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரின் அடிமைத்தனத்திலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களின் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்து பெண் பிள்ளைகளை தங்களின் பணிவிடைக்காக உயிருடன் விட்டுவைத்து உங்களுக்கு விதவிதமான இழிவுகளை அளித்துக் கொண்டிருந்தார்கள். பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றியதில் உங்கள் இறைவனிடமிருந்து மிகப் பெரும் நன்றியை வேண்டி நிற்கும் சோதனை இருக்கின்றது.