×

الأعراف

வசனம் 12

அல்-முக்தஸர்

قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍ وَخَلَقْتَهُۥ مِن طِينٍ ﴿١٢﴾

அல்லாஹ் இப்லீஸைக் கண்டித்தவாறு கேட்டான்: “என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிவதிலிருந்து எது உன்னைத் தடுத்தது?” இப்லீஸ் தன் இறைவனிடம் பின்வருமாறு பதில் கூறினான்: “நான் அவரைவிடச் சிறந்தவன் என்பதே என்னைத் தடுத்தது. நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். அவரையோ மண்ணிலிருந்துதான் படைத்தாய். நெருப்பு மண்ணைவிடச் சிறந்தது.”