×

الأعراف

வசனம் 11

அல்-முக்தஸர்

وَلَقَدْ خَلَقْنَـٰكُمْ ثُمَّ صَوَّرْنَـٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ ٱلسَّـٰجِدِينَ ﴿١١﴾

மனிதர்களே! நாம் உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். பின்னர் அவருக்கு அழகிய தோற்றமும் வடிவமும் கொடுத்தோம். பின்னர் அவரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அவருக்கு சிரம்பணியுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர. அவன் கர்வம் மற்றும் பிடிவாதம் காரணமாக சிரம்பணிய மறுத்தான்.