அல்-முக்தஸர்
قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍ ﴿١١٦﴾
மூஸா அவர்களைப் பொருட்படுத்தாதவராக, தம் இறைவன் தமக்கு உதவி புரிவான் என்ற உறுதியான நம்பிக்கையுடையவராக அவர்களிடம் கூறினார்: “உங்களின் கயிறுகளையும் கைத்தடிகளையும் எறியுங்கள்.” அவர்கள் போட்ட போது மக்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து திருப்பி மயக்கினார்கள். அவர்களைப் பயமுறுத்தினார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு பலம்மிக்க சூனியத்தை அவர்கள் கொண்டுவந்தார்கள்.