அல்-முக்தஸர்
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهْتَدُوا۟ بِهَا فِى ظُلُمَـٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٩٧﴾
ஆதமின் மக்களே! அவன்தான் வானத்தில் உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். தரையிலும் கடலிலும் நீங்கள் பயணம் செய்யும் போது வழி குழம்பிவிட்டால் அவற்றைக் கொண்டே நீங்கள் சரியான வழியை அறிந்துகொள்கிறீர்கள். நம்முடைய ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் அவற்றைச் சிந்தித்து பயன்பெறும் கூட்டத்துக்கு நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.