அல்-முக்தஸர்
إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلْحَبِّ وَٱلنَّوَىٰ ۖ يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَمُخْرِجُ ٱلْمَيِّتِ مِنَ ٱلْحَىِّ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ ﴿٩٥﴾
நிச்சயமாக அல்லாஹ்தான் விதையை வெடிக்கச் செய்து பயிர்களை வெளிப்படுத்துகிறான்; மேலும் வித்தை வெடிக்கச் செய்து அதிலிருந்து பேரீச்ச மரம் திராட்சை இன்னும் இன்னோரன்ன மரங்கள் உருவாகின்றன. மனிதன், ஏனைய விலங்குகள் ஆகியற்றை விந்திலிருந்து வெளிப்படுத்தி மரணித்தவைகளில் இருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகிறான். கோழியில் இருந்து முட்டையையும், மனிதனில் இருந்து விந்தையும் வெளிப்படுத்தி உயிருள்ளவைகளைகளில் இருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகிறான். இவையனைத்தையும் செய்வது உங்களைப் படைத்த அல்லாஹ்தான். இணைவைப்பாளர்களே! அவனது அற்புத படைப்புக்களைப் பார்த்துக் கொண்டே நீங்கள் சத்தியத்தை விட்டு எங்கே திசைமாறிச் செல்கிறீர்கள்?