×

الأنعام

வசனம் 94

அல்-முக்தஸர்

وَلَقَدْ جِئْتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقْنَـٰكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَـٰكُمْ وَرَآءَ ظُهُورِكُمْ ۖ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَـٰٓؤُا۟ ۚ لَقَد تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمْ تَزْعُمُونَ ﴿٩٤﴾

மீண்டும் எழுப்பப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் நீங்கள் நம்மிடம் தனித்தனியாக வந்துள்ளீர்கள். பணமோ பதவியோ எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் முதலில் படைக்கப்பட்டவாறு நிர்வாணமாகவும், பாதணியின்றியும், விருத்தசேதனம் செய்யப்படாமலும் வந்துள்ளீர்கள். நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்களையெல்லாம் உலகில் உங்களையும் மீறி விட்டு வந்துவிட்டீர்கள். உங்களுடைய தரகர்களாக, வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் கருதிக்கொண்டிருந்த உங்களது தெய்வங்களை நாம் உங்களுடன் காணவில்லை. உங்களிடையேயுள்ள தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன. அவர்கள் பரிந்துரை செய்பவர்கள், அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் என்ற உங்களது எண்ணமும் உங்களை விட்டும் மறைந்து சென்றுவிட்டது.