×

الأنعام

வசனம் 61

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ ﴿٦١﴾

அல்லாஹ்தான் தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவன்; அவர்களை அடிபணிய வைப்பவன். அனைத்து விதத்திலும் எல்லாவற்றையும் மிகைத்தவன். அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. தனது மகத்துவத்திற்குத் தக்கவாறு தனது அடியார்களின் மேல் அவன் இருக்கிறான். மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது சங்கையான வானவர்களை அனுப்புகிறான். உயிரைக் கைப்பற்றும் வானவரும் அவரது உதவியாளர்களும் உங்களின் உயிரைக் கைப்பற்றி உங்களின் தவணை முடியும் வரை, அவர்கள் உங்களின் செயல்களைக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் செய்வதில்லை.