×

الأنعام

வசனம் 60

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُم بِٱلَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰٓ أَجَلٌ مُّسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٦٠﴾

நீங்கள் தூங்கும் போது அல்லாஹ்வே உங்களின் ஆன்மாக்களை தற்காலிகமாகக் கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்போது நீங்கள் சம்பாதிப்பவற்றை அவனே அறிவான். தூக்கத்தில் உங்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றிய பிறகு பகலில் நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை எழுப்புகிறான். அல்லாஹ்விடம் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடையும் வரை இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும். பின்னர் மறுமைநாளில் அவன் பக்கமே நீங்கள் எழுப்பப்பட்டு திரும்பி வர வேண்டும். அப்போது இவ்வுலக வாழ்வில் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.