அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ ۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ ﴿١٥٩﴾
மார்க்கத்தில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சிலவற்றை விட்டு, தங்களின் மார்க்கத்தைப் பல பிரிவுகளாக ஆக்கிக் கொண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களுடன், தூதரே! உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இருக்கும் வழிகேட்டை விட்டும் நீர் நீங்கியவராவீர். அவர்களை எச்சரிப்பதே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இவ்வுலகில் செய்துகொண்டிருந்தவற்றை மறுமை நாளில் அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.