×

الأنعام

வசனம் 158

அல்-முக்தஸர்

هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ رَبُّكَ أَوْ يَأْتِىَ بَعْضُ ءَايَـٰتِ رَبِّكَ ۗ يَوْمَ يَأْتِى بَعْضُ ءَايَـٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَـٰنُهَا لَمْ تَكُنْ ءَامَنَتْ مِن قَبْلُ أَوْ كَسَبَتْ فِىٓ إِيمَـٰنِهَا خَيْرًا ۗ قُلِ ٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ ﴿١٥٨﴾

இவ்வுலகில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் தங்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் இந்த நிராகரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பு கூறுவதற்காக உம் இறைவனின் வருகையை எதிர்பார்க்கிறார்களா? அல்லது மறுமையை அறிவிக்கக்கூடிய உம் இறைவனின் சில அத்தாட்சிகளையா? சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது போன்ற உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வெளிப்பட்டுவிடும் நாளில் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கையோ இதுவரை நற்செயல் புரியாத நம்பிக்கையாளனுக்கு அவன் அப்போது செய்யும் செயல்களோ எந்தப் பயனையும் அளிக்காது. தூதரே! நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”