×

المائدة

வசனம் 75

அல்-முக்தஸர்

مَّا ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٌ ۖ كَانَا يَأْكُلَانِ ٱلطَّعَامَ ۗ ٱنظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ ٱلْـَٔايَـٰتِ ثُمَّ ٱنظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ ﴿٧٥﴾

மர்யமின் மகன் ஈஸா தூதர்களில் ஒரு தூதர் மாத்திரமே. அவர்கள் மரணித்தது போலவே இவரும் மரணிப்பவரே. அவரது தாய் மர்யம் அதிகமாக உண்மையுரைக்கும் உண்மைப்படுத்தும் பெண்மணியாக இருந்தார். இருவருக்கும் உணவுத் தேவை இருப்பதனால் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். உணவுத் தேவை உள்ளவர்கள் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? தூதரே! ஏகத்துவத்தை அறிவிக்கக்கூடிய, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கும் அவர்களின் எல்லைமீறல் தவறு என நிருபிக்கக்கூடிய, அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை கவனமாகப் பார்ப்பீராக, இருந்தும் அவர்கள் இந்த அத்தாட்சிகளை மறுக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான அத்தாட்சிகளை அவர்கள் கண்ட பின்னரும் எவ்வாறு அவர்கள் சத்தியத்தை விட்டும் திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.