அல்-முக்தஸர்
إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمْ رَٰكِعُونَ ﴿٥٥﴾
யூதர்களோ கிறிஸ்தவர்களோ ஏனைய நிராகரிப்பாளர்களோ உங்களின் நண்பர்கள் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களுமே உங்களின் நண்பர்களாவர். அந்த நம்பிக்கையாளர்கள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குவார்கள்.