அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِۦ فَسَوْفَ يَأْتِى ٱللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلْكَـٰفِرِينَ يُجَـٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَآئِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٥٤﴾
நம்பிக்கைக் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தை விட்டு நிராகரிப்பின் பக்கம் திரும்பிச் சென்றால் - அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக ஒரு சமூகத்தைக் கொண்டுவருவான். அவர்களது சிறந்த நடத்தையினால் அவர்கள் அவனை நேசிப்பார்கள், அவனும் அவர்களை நேசிப்பான். அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் கருணையாளர்களாகவும் நிராகரிப்பாளர்களுடன் கடினமானவர்களாவும் இருப்பார்கள். தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போர் செய்வார்கள். படைப்பினங்களின் திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அல்லாஹ் அருள்புரிவதில் தாராளமானவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்து அவர்களுக்கு வழங்கக்கூடியவன் தகுதியற்றவர்களுக்கு அவன் அதனை வழங்குவதில்லை.