×

المائدة

வசனம் 45

அல்-முக்தஸர்

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ ﴿٤٥﴾

நாம் தவ்ராத்தில் யூதர்கள் மீது பின்வரும் விஷயத்தை கடமையாக்கினோம்: “வேண்டுமென்றே ஒரு மனிதரைக் கொலை செய்பவர் அதற்குப் பகரமாக கொலை செய்யப்படுவார். வேண்டுமென்றே கண்ணை நோண்டி எடுத்தவரின் கண்ணும் நோண்டி எடுக்கப்படும். வேண்டுமென்றே மூக்கை அறுத்தவரின் மூக்கும் அறுக்கப்படும். வேண்டுமென்றே காதை வெட்டியவரின் காதும் வெட்டப்படும். வேண்டுமென்றே பல்லை பிடுங்கியவரின் பல்லும் பிடுங்கப்படும். காயங்களுக்கு சமமான அளவு காயப்படுத்தப்படுவார்கள். யாரேனும் குற்றவாளியை மன்னித்துவிட்டால் அநியாயம் இழைத்தவரை மன்னித்ததனால் அது மன்னித்தவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்துவிடும். பழிவாங்குவதிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்கள்.