×

المائدة

வசனம் 44

அல்-முக்தஸர்

إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّـٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَـٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَـٰتِى ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَـٰفِرُونَ ﴿٤٤﴾

நாம் மூஸாவின்மீது தவ்ராத்தை இறக்கினோம். அதில் நன்மையான விஷயங்களின்பால் வழிகாட்டுதலும் வெளிச்சம் பெறக்கூடிய ஒளியும் இருந்தன. இஸ்ராயீலின் மக்களில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த தூதர்கள் அந்த வேதத்தின்படியே தீர்ப்பளித்தார்கள். திரிவுபடுத்தல் மாற்றுதல் ஆகியவற்றை விட்டும் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியதனால், மக்களை வழிநடத்தும் அறிஞர்களும் சட்டவல்லுனர்களும் அதன்படியே தீர்ப்பளித்தார்கள். அது உண்மையானது என்பதற்கு அவர்களே சாட்சியாளர்களாக இருந்தார்கள். மக்கள் தங்கள் விவகாரங்களை அவர்களிடமே கொண்டு செல்கின்றனர். யூதர்களே! நீங்கள் மக்களுக்குப் பயப்படாதீர்கள். அல்லாஹ்வாகிய எனக்கே பயப்படுங்கள். அல்லாஹ் வேதத்தில் இறக்கிய கட்டளைக்குப் பகரமாக தலைமைத்துவம், அந்தஸ்து, சொத்து போன்ற அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். யார் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காமல் இருப்பதை சரியெனக் கருதுகிறாரோ அல்லது அதனைவிடுத்து வேறு சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரோ அல்லது அதனை பிற சட்டங்களுக்குச் சமமாகக் கருதுகிறாரோ அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள்.