அல்-முக்தஸர்
قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِمَا ٱدْخُلُوا۟ عَلَيْهِمُ ٱلْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَـٰلِبُونَ ۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٢٣﴾
மூஸாவின் தோழர்களில் அல்லாஹ்வையும் அவனது தண்டனையையும் அஞ்சிய இரு மனிதர்கள் இருந்தார்கள் - அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படும் பாக்கியத்தை அளித்து அருள்புரிந்திருந்தான் - அவர்கள் தங்கள் சமூகத்தாருக்கு மூஸா (அலை) அவர்களது ஏவலுக்குக் கட்டுப்படுமாறு ஆர்வமூட்டியவர்களாக கூறினார்கள், “நகரின் வாயிலில் அநியாயக்காரர்களுக்கு எதிராக நுழைந்துவிடுங்கள். நீங்கள் நுழைந்துவிட்டால் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நீங்கள்தாம் வெற்றியடைவீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதே இறைவன் அமைத்த நியதியாகும். நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள். அல்லாஹ்வை ஈமான் கொள்வது அவனை முழுமையாக நம்புவதை வேண்டிநிற்கின்றது.