அல்-முக்தஸர்
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ ﴿٢٢﴾
அவரது சமூகத்தார் கூறினார்கள்: “மூஸாவே! புனித பூமியில் பலம் பொருந்திய கடுமையாகப் போர் புரியும் ஒரு சமூகத்தார் இருக்கிறார்கள். இதனால் நாம் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் அங்கிருக்கும் வரை நாங்கள் அங்கு நுழைய மாட்டோம். ஏனெனில் அவர்களுடன் போரிடுவதற்கு எங்களிடம் எந்தப் பலமும் இல்லை. அவர்கள் வெளியேறி விட்டால் நாங்கள் அங்கு நுழைவோம்.