×

المائدة

வசனம் 117

அல்-முக்தஸர்

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۚ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَّا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ ﴿١١٧﴾

ஈஸா தம் இறைவனிடம் கூறுவார்: “உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு நீ எனக்கு கட்டளையிட்டதைத்தான் நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடையே இருந்த வரை அவர்கள் கூறுவதை கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என் தவணையை நிறைவுசெய்து என்னை உயிரோடு வானத்தின்பால் உயர்த்திய பின்னர் நீயே அவர்களின் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கின்றாய். நீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எதுவும் உன்னை விட்டு மறைய முடியாது. நான் அவர்களிடம் கூறியது, எனக்குப் பிறகு அவர்கள் கூறியது எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை.