அல்-முக்தஸர்
وَإِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلْتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِى وَأُمِّىَ إِلَـٰهَيْنِ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالَ سُبْحَـٰنَكَ مَا يَكُونُ لِىٓ أَنْ أَقُولَ مَا لَيْسَ لِى بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُۥ فَقَدْ عَلِمْتَهُۥ ۚ تَعْلَمُ مَا فِى نَفْسِى وَلَآ أَعْلَمُ مَا فِى نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ ﴿١١٦﴾
மறுமை நாளில் மர்யமின் மகன் ஈஸாவிடம், “மர்யமின் மகன் ஈஸாவே, “என்னையையும் என் தாயையும் அல்லாஹ்வை விடுத்து வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா?” என அல்லாஹ் கூறுவதை நினைத்துப் பார்ப்பீராக: அதற்கு ஈஸா தம் இறைவனின் தூய்மையை உறுதிப்படுத்தியவராகக் கூறுவார், “சத்தியத்தைத் தவிர வேறு எதைக்கூறுவதற்கும் எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீ மட்டுமே வெளிப்படையானதையும் மறைவானதையும் நன்கறிந்தவன்.