அல்-முக்தஸர்
وَدُّوا۟ لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا۟ فَتَكُونُونَ سَوَآءً ۖ فَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ أَوْلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ ۖ وَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا ﴿٨٩﴾
நயவஞ்சகர்கள் நிராகரித்ததுபோல நீங்கள் உங்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்து நீங்களும் அவர்களும் நிராகரிப்பில் சமமாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் இணைவைப்பு நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு புலம்பெயரும்வரை அவர்களை அவர்களின் விரோதத்தினால் நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் இதனைப் புறக்கணித்து தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நீடித்தால் அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர்களாகவோ உங்களின் எதிரிகளுக்கு எதிராக உதவும் உதவியாளர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள்.