×

النساء

வசனம் 88

அல்-முக்தஸர்

فَمَا لَكُمْ فِى ٱلْمُنَـٰفِقِينَ فِئَتَيْنِ وَٱللَّهُ أَرْكَسَهُم بِمَا كَسَبُوٓا۟ ۚ أَتُرِيدُونَ أَن تَهْدُوا۟ مَنْ أَضَلَّ ٱللَّهُ ۖ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلًا ﴿٨٨﴾

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரு பிரிவினராகி விட்டீர்களே? உங்களில் ஒரு பிரிவினர் அந்த நயவஞ்சகர்கள் நிராகரித்துவிட்டதால் அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் அவர்கள் ஈமான் கொண்டுள்ளதால் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் விவகாரங்களில் கருத்துவேறுபாடு கொள்வது உங்களுக்கு உகந்ததல்ல. அவர்களின் செயல்களினால் அல்லாஹ் அவர்களை நிராகரிப்பின் பக்கமும் வழிகேட்டின் பக்கமும் திருப்பிவிட்டான். அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நேர்வழிகாட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழிகாட்ட முடியாது.