×

النساء

வசனம் 72

அல்-முக்தஸர்

وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ ٱللَّهُ عَلَىَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا ﴿٧٢﴾

முஸ்லிம்களே! உங்களில் தமது கோழைத்தனத்தால் எதிரிகளுடன் போரிடச் செல்லாமல் பின்தங்கக்கூடியவர்களும் ஏனையோரை பின்வாங்கச் செய்வோரும் இருக்கின்றார்கள். அவர்கள் நயவஞ்சகர்களும் பலவீனமான ஈமானுடையவர்களும் ஆவர். உங்களுக்கு உயிரிழப்போ தோல்வியோ ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் தான் தப்பியதை நினைத்து மகிழ்வடைந்து, “அல்லாஹ் என் மீது அருள்புரிந்ததனால் அவர்களுடன் சேர்ந்து போருக்கு நான் புறப்படவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட்டிருக்கும்” என்று கூறுகின்றார்.