×

النساء

வசனம் 71

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ خُذُوا۟ حِذْرَكُمْ فَٱنفِرُوا۟ ثُبَاتٍ أَوِ ٱنفِرُوا۟ جَمِيعًا ﴿٧١﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் போரிடுவதற்கு ஒரு படையின் பின் ஒரு படையாகவோ அனைவரும் ஒன்றுசேர்ந்தோ புறப்படுங்கள். இவையனைத்தும் உங்களின் நலன்களின் அடிப்படையிலும், எதிரிகளுக்கு சேதமும் தோல்வியும் ஏற்படும் விதத்திலும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டியதாகும்.