×

النساء

வசனம் 48

அல்-முக்தஸர்

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدِ ٱفْتَرَىٰٓ إِثْمًا عَظِيمًا ﴿٤٨﴾

நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளில் எந்த ஒன்றும் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இணைவைப்பு நிராகரிப்பு ஆகியவற்றைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடுகிறான் அல்லது தனது நீதிக்கு ஏற்ப தான் நாடியவர்களை - அவர்கள் செய்த பாவங்களின் அளவு - தண்டித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவர்கள் பெரும் பாவத்தையே கற்பனை செய்துள்ளனர். அதே நிலையிலேயே மரணித்துவிடுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.