×

النساء

வசனம் 47

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ ءَامِنُوا۟ بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُم مِّن قَبْلِ أَن نَّطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدْبَارِهَآ أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ أَصْحَـٰبَ ٱلسَّبْتِ ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا ﴿٤٧﴾

வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! நாம் உங்கள் முகங்களில் உள்ள புலன்களை நீக்கி அவற்றை உங்கள் பின்புறத்தில் வைப்பதற்கு முன்னர் அல்லது தடுக்கப்பட்ட சனிக்கிழமையில் தடையையும் மீறி மீன்பிடித்தவர்களைக் குரங்குகளாக உருமாற்றி என் அருளிலிருந்து தூரமாக்கியது போன்று உங்களையும் என் அருளிலிருந்து தூரமாக்குவதற்கு முன்னர் நாம் முஹம்மது மீது இறக்கியவற்றின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ள தவ்ராத்தையும் இன்ஜீலையும் உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளையும் விதியும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.