×

النساء

வசனம் 40

அல்-முக்தஸர்

إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَـٰعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا ﴿٤٠﴾

அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவன். தன் அடியார்களில் யார்மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அவர்களின் நன்மைகளில் அணுவளவுகூட குறைத்துவிடவோ தீமைகளில் எதையும் அதிகரித்துவிடவோ மாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் தனது அருளினால் அதனை பன்மடங்காக்கித் தருவான். அத்துடன் தன் புறத்திலிருந்து பெரும் கூலியையும் வழங்கிடுவான்.