அல்-முக்தஸர்
وَمَاذَا عَلَيْهِمْ لَوْ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُ ۚ وَكَانَ ٱللَّهُ بِهِمْ عَلِيمًا ﴿٣٩﴾
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் அவனுக்காகவே செலவழித்தால் அவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? மாறாக அதில்தான் அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் அடங்கியுள்ளன. அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களது நிலமை அவனைவிட்டு மறைவானதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரது செயலுக்கேற்ற கூலியை அவன் வழங்குவான்.