×

النساء

வசனம் 3

அல்-முக்தஸர்

وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَـٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَـٰثَ وَرُبَـٰعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟ ﴿٣﴾

உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்து, அவர்களுக்குரிய மணக்கொடையை குறைத்துவிடுவதனாலோ அல்லது மோசமாக நடந்துகொள்ளுவதனாலோ நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் அவர்களை விட்டுவிட்டு மற்ற பெண்களில் நீங்கள் விரும்பியவர்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். அவர்களிடையே உங்களால் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒருத்தியை மட்டும் போதுமாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடிமைப் பெண்களுக்கு மனைவிகளுக்குரிய உரிமைகள் அவசியமற்றது. அநாதைகளுடைய விடயமாகவும் ஒரு திருமணம் முடித்துக் கொள்வது அல்லது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களைஅனுபவிப்பது சம்பந்தமாகவும் வசனங்களில் இடம்பெற்ற இந்த விடயங்களே நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிக நெருக்கமானதாகும்.