×

النساء

வசனம் 2

அல்-முக்தஸர்

وَءَاتُوا۟ ٱلْيَتَـٰمَىٰٓ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَتَبَدَّلُوا۟ ٱلْخَبِيثَ بِٱلطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَهُمْ إِلَىٰٓ أَمْوَٰلِكُمْ ۚ إِنَّهُۥ كَانَ حُوبًا كَبِيرًا ﴿٢﴾

பொறுப்பாளிகளே! உங்களிடம் இருக்கும் அநாதைகள் பருவ வயதை அடைந்து அவர்கள் புரிந்து நடந்துகொள்வோராகவும் இருந்தால் அவர்களின் செல்வங்களை முழுமையாக வழங்கிவிடுங்கள். அவர்களிடமிருந்து தரமான பொருட்களைப் பெற்று மோசமான பொருட்களை திருப்பி அளித்து அனுமதிக்கப்பட்டதற்குப் பகரமாக தடைசெய்யப்பட்டதை மாற்றி எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்துவிடாதீர்கள். நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது.