அல்-முக்தஸர்
إِن تُبْدُوا۟ خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا۟ عَن سُوٓءٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا ﴿١٤٩﴾
நீங்கள் நன்மையான சொல்லையோ செயலையோ வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும் அல்லது உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் வல்லமையுடையவனாகவும் இருக்கின்றான். எனவே மன்னிப்பதை உங்களின் பண்பாக ஆக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் உங்களை மன்னிக்கலாம்.