அல்-முக்தஸர்
لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴿١٤٨﴾
தீய வார்த்தையை வெளிப்படையாக கூறுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மாறாக அதனை அல்லாஹ் வெறுப்பதோடு அதனை எச்சரித்துமுள்ளான். ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனைப் பற்றி முறைப்பாடாகவோ சாபமாகவோ அதைப் போன்ற வார்த்தையினால் பதிலளிப்பதாகவோ வெளிப்படையாகக் கூற அனுமதி உண்டு. ஆயினும் அநீதி இழைக்கப்பட்டவன் தீய வார்த்தையை வெளிப்படையாகக் கூறாமல் பொறுமையாக இருப்பதே சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவனாகவும் உங்களின் எண்ணங்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே தீயதைக் கூறுவதிலிருந்தும் நாடுவதிலிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள்.