அல்-முக்தஸர்
تِلْكَ حُدُودُ ٱللَّهِ ۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿١٣﴾
அநாதைகள், ஏனையவர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்கள் எடுத்து நடப்பதற்காக அவர்கள் மீது விதித்த சட்டங்களாகும். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி இருக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச்செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களை அழிவு நெருங்கவும்மாட்டாது. இறைவன் அளித்த இந்தக் கூலிதான் மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வெற்றி எதுவும் இல்லை.