×

النساء

வசனம் 12

அல்-முக்தஸர்

وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍ ۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّنۢ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍ ۗ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَـٰلَةً أَوِ ٱمْرَأَةٌ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ ۚ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّ ۚ وَصِيَّةً مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٌ ﴿١٢﴾

கணவன்மார்களே! உங்கள் மனைவியருக்கு உங்கள் மூலமோ முன்னைய கணவர் மூலமோ குழந்தைகள் இல்லையென்றால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் நான்கில் ஒருபங்குதான் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனத்தையும் அவர்களின் கடனையும் நிறைவேற்றிய பிறகே உங்களுக்கான பங்கீடு கிடைக்கும். கணவன்மார்களே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்கள் மனைவியருக்கு நான்கில் ஒரு பங்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் அவர்களுக்கு எட்டில் ஒருபங்குதான் உண்டு. நீங்கள் செய்த மரண சாசனத்தையும் உங்கள் மீதுள்ள கடனையும் நிறைவேற்றிய பிறகே சொத்து பங்கீடு செய்யப்படும். இறந்தவர் ஆணோ பெண்ணோ அவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லையெனில் ஒரு தாய்வழிச் சகோதரனோ அல்லது சகோதரியோ மட்டும் இருந்தால் அவருக்கோ அவளுக்கோ ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தாய்வழிச் சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் மூன்றில் ஒருபங்கை அவர்களுக்குச் சமமாக பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். இதில் ஆண், பெண் இருவருக்கும் சமஅளவு பங்குதான் கிடைக்கும். இறந்தவரின் மரண சாசனத்தையும் அவர்மீதுள்ள கடனையும் நிறைவேற்றியபிறகே இந்தப் பங்கீடு செய்யப்படும். இறந்தவரின் மரண சாசனம் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருந்து வாரிசுதாரர்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இருந்துவிடக்கூடாது. இவ்வசனம் உள்ளடக்கியுள்ள இச்சட்டம் அல்லாஹ் உங்கள்மீது விதித்த கடமையாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை அவன் நன்கறிந்தவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவன். குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.