×

آل عمران

வசனம் 93

அல்-முக்தஸர்

كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَٰٓءِيلُ عَلَىٰ نَفْسِهِۦ مِن قَبْلِ أَن تُنَزَّلَ ٱلتَّوْرَىٰةُ ۗ قُلْ فَأْتُوا۟ بِٱلتَّوْرَىٰةِ فَٱتْلُوهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٩٣﴾

தூய்மையான அனைத்து உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னால் யஃகூபு தமக்குத்தாமே விலக்கிக் கொண்டவற்றைத்தவிர எதுவும் அவர்கள்மீது தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. அவை தவ்ராத்தில் எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன என்று யூதர்கள் கூறுவது பொய்யாகும். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து படித்துக் காட்டுங்கள்.” அவர்கள் வாயடைத்துப்போனார்கள். அவர்களால் அதைக் கொண்டுவர முடியவில்லை. யூதர்கள் தவ்ராத்தின் பெயரால் புனைந்து கூறியதற்கும் அதன் உள்ளடக்கத்தைத் திரித்தனர் என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும்.