அல்-முக்தஸர்
لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿٩٢﴾
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் விரும்பும் செல்வத்தைச் செலவுசெய்யாதவரை நல்லோர்களின் கூலியையும் அவர்களது உயர்நிலையையும் உங்களால் அடையமுடியாது. குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செலவுசெய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.